உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மெகாபாண்டே என்பவர் தன் கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மெகாபாண்டேக்கு “ரூபாய் 50 ஆயிரம் தனக்கு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உங்களது மூத்த மகளை கொலை செய்து விடுவோம்” என்ற மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
அதனை தொடர்ந்து மெகாபாண்டே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது 4 வயது படிக்கும் மெகாபாண்டேவின் இளைய மகள் தான் இந்த கடிதத்தை எழுதி வீட்டின் கேட்டில் வைத்தது தெரியவந்தது. அதன்பின் இது போன்று மறுபடியும் செய்யக்கூடாது என்று அந்த சிறுமியிடம் காவல்துறையினர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.