போக்குவரத்து கழகத்தின் சார்பில் முதல் கட்ட கூட்டம் நடைபெற்றுள்ளது
சென்னையில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் கட்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மோட்டார் அல்லாத போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல வகையான போக்குவரத்து ஒருங்கிணைப்புகளை செயல்படுத்தி மேம்படுத்தும் நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் ஒரே பயணச்சீட்டில் மாநகர பேருந்துகள், மெட்ரோ புறநகர் ரயில்கள் என அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.