தமிழகத்தில் 2020 ஆம் வருடம் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுடைய நலன் கருதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை அடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் வழக்கம் போல தொடங்கப்பட்ட போதிலும் மாணவர்களுக்கிடையேயானா கற்றல் மற்றும் கற்பித்தலில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டது. இதனை சரி செய்யும் விதமாக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மன நல ஆலோசனை தேவைப்படும் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக மனநல ஆலோசனையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் வருடம் முதல் மொபைல் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை மொபைல் மனநல ஆலோசனை மையம் முறையாக பள்ளிகளில் செயல்படாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது. இது பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மிக முக்கியமானது என்றும் கருத்து தெரிவித்தது. மேலும் 2012 ஆம் வருடம் அரசு வெளியிட்ட அரசாணையின்படி பள்ளி மாணவர்களுக்கு மன நல ஆலோசனை மையம் அமைத்து ஆலோசனை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.