Categories
தேசிய செய்திகள் ராசிபலன்

மெட்டா நிறுவனத்தின் இந்தியப் பிரிவு துணைத் தலைவராக…. சந்தியா தேவநாதன் நியமனம்…. வெளியான தகவல்…..!!!!!

மெட்டா நிறுவனத்தின் இந்தியப்பிரிவு துணைத் தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட இருக்கிறார். அடுத்த வருடம் ஜனவரி 1ம் தேதி முதல் அவர் பொறுப்பேற்பார் என்று மெட்டா நிறுவனம் அறிவித்து உள்ளது. முகநூல், வாட்ஸ்அப் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் இந்தியப்பிரிவுத் தலைவராக இருந்த அஜித் மோகன் தன் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து மெட்டா நிறுவனம் இப்போது இந்தியப்பிரிவுக்கு தலைவரை நியமித்து உள்ளது. அந்த வகையில் முகநூல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சந்தியா தேவநாதன், இப்போது மெட்டா நிறுவனத்தின் இந்தியப்பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் ஜனவரி 2023ம் வருடம் 1ம் தேதி முதல் பொறுப்பேற்க இருக்கிறார். இத்தகவலை மெட்டா நிறுவனத்தின் வணிகப்பிரிவு அலுவலர் மரேன் லிவின் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

Categories

Tech |