Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. 50-வது திருமண நாளை கொண்டாடிய ஜெயம் ரவியின் பெற்றோர்…. வைரலாகும் அழகிய FAMILY PHOTO….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் தமிழில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நிலையில், இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தற்போது சைரன் மற்றும் இறைவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் அம்மா-அப்பா தங்களுடைய 50-வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

இந்த திருமண நாளை முன்னிட்டு ஜெயம் ரவியின் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு குடும்பத்தோடு அனைவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு 50 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற அதே இடத்தில் மீண்டும் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் இயக்குனர் மோகன் ராஜா வெளியிட்ட புகைப்படமானது தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |