Categories
சினிமா தமிழ் சினிமா

“வணங்கான்” படம் பிரச்சனையின் காரணமாக நிறுத்தப்பட்டதா….? இயக்குனர் பாலா திடீர் விளக்கம்….. குழப்பத்தில் ரசிகர்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக ஜெபிப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு சமீபத்தில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதோடு ஜெய் பீம் மற்றும் சூரரைப் போற்று திரைப்படங்கள் சமீப காலமாக ஏராளமான விருதுகளை குவித்தது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வரலாற்று பாணியில் உருவாகும் சூர்யா 42 திரைப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். அதன் பிறகு வாடிவாசல் மற்றும் வணங்கான் போன்ற திரைப்படங் களிலும் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வணங்கான் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் திரைப்படத்தின் சூட்டிங் பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டதாக இணையதளத்தில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது இயக்குனர் பாலாவிடம் வணங்கான் படம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது வணங்கான் படம் பிரச்சனையின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  அதற்கு பாலா வணங்கான் திரைப்படம் வந்து கொண்டே இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் இயக்குனர் பாலா சொன்ன தகவலால் வணங்கான் திரைப்படம் குறித்து சூர்யா ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |