Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாணவியை தனது அறைக்கு அழைத்த தலைமையாசிரியர்… பள்ளியில் நடந்த கொடுமை… பாய்ந்த போக்சோ…!!!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயத்தாறு அருகே இருக்கும் ஒரு அரசு உதவி பெறும் தனியார் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக ஆல்பர்ட் கென்னடி என்பவர் பணியாற்றி வருகின்றார். இவர் சம்பவத்தைன்று அந்த பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவியை தனது அறைக்கு வருமாறு கூப்பிட்டுள்ளார்.

பின் அவரின் அறைக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகின்றது. இது குறித்து மாணவி வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் கூறியிருக்கின்றார். அதன் பேரில் பெற்றோர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். இதன்பின் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்துள்ளார்கள்.

Categories

Tech |