Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சிக்ஸ் போக வேண்டியது..! வியந்து போன ரசிகர்கள்…. “பறந்து பந்தை தடுத்த ஆஸி வீரர்”….. நம்பமுடியாத வைரல் வீடியோ.!!

ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் அகர் சூப்பர் மேன் போல பறந்து நம்ப முடியாத வகையில் பந்தை பிடித்து வீசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

2022 டி20 உலக கோப்பையை கைப்பற்றிய கையோடு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில்  சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி மலானின் அதிரடி சதத்தால் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டேவிட் மலான் 134 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர் (86), டிராவிஸ் ஹெட் (69),  ஸ்டீவ் ஸ்மித் (80) ஆகியோரின் அதிரடி அரை சதத்தால் 46.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இங்கிலாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யும்போது ஆஸ்திரேலியா அணி வீரர் ஆஷ்டன் அகர் பீல்டிங்கில் அட்டகாசமாக செயல்பட்ட வீடியோ இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வைரலாகி வருகிறது. அதாவது, இங்கிலாந்து அணி 45 வது ஓவரில் பேட்டிங் ஆடிக் கொண்டிருந்தது. கமெண்ட்ஸ் வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தை டேவிட் மலான் மிட் விக்கெட் திசையில் தூக்கி அடித்தார்.

அது சிக்ஸர் என்று தான் அனைவரும் நினைத்தனர்.. ஆனால் அதுதான் இல்லை.. சற்றும் எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பகுதியில் நின்ற ஆஷ்டன் அகர் தாவி அற்புதமாக பந்தை பிடித்து உள்ளே தூக்கி போட்டார். இதனை பார்த்த மைதானத்திலிருந்த ரசிகர்கள் வியந்து போய் கைதட்டி பாராட்டினர். ஆஷ்டன் அகர் சூப்பர் மேன் போல பறந்து நம்ப முடியாத வகையில் சிக்ஸ் போக வேண்டிய பந்தை பிடித்து வீசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |