Categories
மாநில செய்திகள்

யாருக்கும் இல்ல பயப்படாதீங்க…… பீதியை கிளப்பாதீங்க….. விஜயபாஸ்கர் அறிவுறுத்தல் ….!!

கொரோனா வைரஸ் குறித்து பயப்பட வேண்டாம், பீதியை கிளப்பும் வேண்டாம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு கண்காணிப்பை ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தில் 52 பேரின் இரத்த மாதிரி ஆய்வுக்காக அனுப்பப்பட்ட பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. கொரோனா பரவாமல் கைகளைக் கிருமி நாசினி மூலம் அடிக்கடி கழுவ வேண்டும். இருமல் , காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் அவசியம்  மருத்துவமனைக்கு வரவும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம். தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்களிலும் கொரோனா வைரஸ் சோதனையை அதிகப்படுத்தி உள்ளோம். தியேட்டர்கள் , வணிக வளாகங்களில் கிருமிநாசினி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் விமான நிலையங்கள் , துறைமுகங்களை தொடர்ந்து ரயில் நிலையங்களிலும் கொரோனா சோதனை நடைபெறுகிறது.

Categories

Tech |