Categories
தேசிய செய்திகள்

ரயில் டிக்கெட் புக் பண்ண போறீங்களா?…. அப்போ இத பண்ணா எந்த பிரச்சனையும் இல்லை…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணம் செய்யும்போது முன்பதிவு செய்வது அவசியம். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஐ ஆர் சி டி சி இணையதளம் அல்லது மொபைல் செயலி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. கையில் உள்ள ஸ்மார்ட் போன் மூலமாக இருந்த இடத்திலிருந்து கொண்டே டிக்கெட் புக்கிங் செய்துவிடலாம். பயணி ஒருவர் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகளை ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். அதுவே ஆதார் எண் ஐ ஆர் சி டி சி தளத்தில் இணைக்கப்பட்டிருந்தால் ஒரு மாதத்திற்கு 24 டிக்கெட்கள் வரை முன்பதிவு செய்ய முடியும்.

ஐ ஆர் சி டி சி இணையதளத்துடன் ஆதார் எண் இணைப்பதற்கு முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான irctc.co.inஎன்ற இணையதள பக்கத்திற்கு சென்று யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் பதிவு செய்ய வேண்டும். அடுத்ததாக மை ப்ரொபைல் டேப் என்ற வசதியின் கீழ் ஆதார் கேஒய்சி என்பதை கிளிக் செய்ய வேண்டும். உங்களின் ஆதார் நம்பரை அதில் இணைத்து ஓ டி பி கொடுக்க வேண்டும். அதன் பிறகு சப்மிட் என்பதை கிளிக் செய்தால் உங்களின் ஆதார் எண் வெரிஃபை செய்யப்படும்.

டிக்கெட் புக்கிங் செய்வதற்கு முன்பு பயணிகளின் பெயர் பட்டியலை முன்கூட்டியே வைத்திருந்தால் புக்கிங் செய்வது சுலபம். ஐ ஆர் சி டி சி இணையதள பக்கத்திற்கு சென்ற யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் பதிவிட்டு ப்ரொபைல் செக்ஷனில் மாஸ்டர் லிஸ்ட் என்பதை கிளிக் செய்து புதிய பயணிகளின் ஆதார் எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவிட்டு சப்மிட் கொடுக்க வேண்டும்.

Categories

Tech |