மதுரை அருகே பெண் குழந்தை என்பதால் எருக்கப்பால் கொடுத்து கொல்லபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செக்கானூரணி அடுத்துள்ள புள்ளநேரி கிராமத்தில் வசித்து வரும் தம்பதி சௌமியா , வயிரமுருகன். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. லோடு மேனாக இருக்கும் இவரின் மனைவிக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. பெண் சிசு பிறந்து 30 நாட்கள் ஆன நிலையில் குழந்தை இல்லாததை கண்ட அண்டை வீட்டார்கள் குழந்தை எங்கே ? என்று கேட்டதும் , அந்த குழந்தை இறந்து விட்டது , வீட்டருகே நாங்கள் புதைத்து விட்டோம் என்று தெரிவித்தனர்.
இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவி VAO கொடுத்த புகாரில் காவல்துறையினர் கூட்டுச்சதி , கொலை செய்தல் , கொலை செய்து மறைத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து சம்பவஇடத்துக்கு வந்த வருவாய்த்துறையினர் , காவல்துறை முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
இது குறித்து சௌமியா, வைரமுருகன், வைர முருகன் தந்தை சிங்க தேவர் ஆகியோரை கைது செய்து , காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. நாங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் இரண்டாவது பெண் குழந்தையை எருக்கம்பால் கொடுத்து கொண்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.