கோவையில் ஒரே கல்லூரியை சேர்ந்த 80 மாணவிகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரிப்பதற்காக தலைமுடியை தானம் செய்துள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் தலைமுடி வைத்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கென்று விக்தயாரிக்க தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ளமக்கள் முடி தானம் செய்து வருகின்றனர். இதற்காக வெளிநாடுகளில் NOSHAVENOVEMBER என்ற ஒரு மாதம் முழுவதும் மக்கள் முடியையும், மீசை தாடியையும் வெட்டாமல் சேவ் செய்யாமல் வளர்த்து தானம் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரே கல்லூரியைச் சேர்ந்த 80 மாணவிகள் தங்களது முடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தானம் செய்துள்ளனர். நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறியதாவது, பொருளாதார ரீதியாக கணக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களால் பணம் கொடுத்து உதவி செய்ய முடியவில்லை.
அதன் காரணமாகவே தலைமுடியை கொடுத்து உதவியுள்ளோம். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏதோ ஒருவர் தலை முடியால் மகிழ்ச்சி அடைகிறார் என்றால் இச்செயலை தொடர்ந்து செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.