தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டம், பாலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மாதவ் மற்றும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த அக்ஷிதா காதலித்து வந்துள்ளனர். பெற்றோரின் விருப்பமின்றி இருவரும் திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த அக்ஷிதாவின் பெற்றோர், தங்கள் உறவினர்களின் உதவியுடன் அக்ஷிதாவை காரில் கடத்தி சென்று, அவருக்கு மயக்க மாத்திரை அளித்துள்ளனர்.
அவர் மயக்கத்தில் இருக்கும் போது அவர் தலையை மொட்டையடித்து விட்டு கணவர் வீட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். இதுகுறித்து மாதவ் – அக்ஷிதா தம்பதியினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.