தமிழில் ஜெயம், வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் தான் சதா(38). அத்துடன் இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் சதா சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “சில தேவைகளுக்காக இருக்கும் உறவுகளில் சிக்கிக்கொண்டு அந்த மனிதர்கள் நம்மைவிட்டு பிரிந்து விடுவார்களோ என எதற்கு பயப்படுகிறீர்கள். நம்மை நெருக்கமானவர்களாக பார்க்காதவர்கள் தம்மை விட்டு விலகியிருப்பது தான் நல்லது.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நீங்கள் மட்டும் தான் உங்களுக்கு துணையாக இருப்பீர்கள். நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ பேர் வருவார்கள் போவார்கள். இதுபோன்ற மனிதர்களை நினைத்து உங்களது வாழ்க்கையை வீணாக்கி கொள்ளாதீர்கள். அத்துடன் பலவந்தமான உறவுகளில் சிக்கிக்கொள்வதை விட தனியாக இருப்பதே நல்லது” என்று கூறியுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் யாரை குறித்து சதா இவ்வாறு பதிவு வெளியிட்டுள்ளார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.