Categories
உலக செய்திகள்

மெய் சிலிர்க்கும் சாகசம்… 2,300 அடி உயரம்… நாயுடன் சேர்ந்து குதித்த நபர்… வைரலாகும் வீடியோ!

ஸ்விட்சர்லாந்தில் நாயுடன் சேர்த்து தன்னைக் கட்டிக் கொண்டு 2 ஆயிரம் அடி உயரத்தில் குதித்து ஒருவர் சாதனை  நிகழ்த்தியுள்ளார்.

ஸ்விட்சர்லாந்து நாட்டின் லாட்டர்புரூனன் என்ற இடத்தைச் சேர்ந்தவர் புரூனோ (Bruno). இவர் 5 வயது நாய் ஒன்றை பிரியமுடன் வளர்த்து வருகின்றார். இந்த நிலையில் தனது செல்லப்பிராணி நாயுடன் இணைந்து சாகசம் செய்து  சாதிக்க நினைத்தார் புரூனோ. இதையடுத்து அவர் அதற்கு தயாரானார்.

Image result for This is the thrilling moment a fearless dog parachutes off a cliff with his owner and plunges more than 2,000 feet.

ஆம், அதே பகுதியில் உள்ள 2, 300 அடி உயர பாறையில் இருந்து தனது நாயுடன் குதிக்க ஆசைப்பட்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து கடினமான பகுதிக்குச் சென்றார். அங்கு சென்றபின் நாய் விளிம்பில் நின்று கொண்டு கீழே  பார்த்தது. நாய்க்கு அவர் பெல்ட் அணிந்திருந்தார்.

Image result for This is the thrilling moment a fearless dog parachutes off a cliff with his owner and plunges more than 2,000 feet.

பின்னர் பாறையின் உச்சத்தில் இருந்து நாயுடன் தன்னைக் சேர்த்து பெல்ட்டுடன் இணைத்து கட்டிக் கொண்டு அங்கிருந்து பாராசூட் உதவியுடன் கீழே குதித்தார்.

Image result for This is the thrilling moment a fearless dog parachutes off a cliff with his owner and plunges more than 2,000 feet.

பறந்து கொண்டிருக்கும் போது நாய் துளியும் பயமில்லாமல் இருப்பது பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்தது. பின்னர் இருவரும் பத்திரமாக புல்வெளியில் தரையிறங்கினர். அதன்பின் நாய் அவர் மீது துள்ளி குதிக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |