நீங்கள் எங்காவது நீங்கள் போகவேண்டும் எனில் வீட்டுவாசலிலேயே பிக்அப் செய்து, மீண்டுமாக அங்கேயே டிராப் செய்கிறது ஊபர், ஓலா ஆகிய டாக்ஸி சேவைகள். இதில் காலை -இரவு வரை எந்த நேரமும் சேவையை வழங்கும் ஊபரை நீங்கள் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஆபத்தான, அசாதாரணமான சூழலில் பாதுகாப்புக்காக ரைடு-ஹைலிங் ஆப் உபெர் எனும் பாதுகாப்பு அம்சத்தை நீங்கள் தொடர்புகொண்டால், உடனடி பாதுகாப்பை உறுதிசெய்ய அந்நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்கிறது.
ரைடர்கள், ஆப்ஸிலுள்ள எமர்ஜென்சி பட்டனைப் பயன்படுத்தி அதிகாரிகளை அழைத்து உதவிதேவைப்பட்டால் பெறலாம். பயன்பாடு இருப்பிடம் மற்றும் பயணத்தகவலைக் காட்டும். ஆகையால் ஒருவர் அவசர கால சேவைகளை அவர்கள் உள்ள இடத்தை விரைவாக எச்சரிக்க முடியும். பயணவிபரங்கள் மெனுவினை ஸ்க்ரோல் செய்து பாதுகாப்பு பட்டனை கிளிக்செய்யவும்.
# “Call 112” விருப்பத்தை (அ) “Safety Line” விருப்பத்தை தேர்வு செய்யலாம்.
# 2 விருப்பங்களும் உங்களின் அழைப்பை Uber அதிகாரிகளுக்கு அனுப்பும்.
# நம்பகமான தொடர்புகள் உடன் உங்களது பயணத்தைப் பகிரவேண்டும்
# இதனிடையில் நம்பகமான தொடர்புகளுடன் பயண நிலையைப் பகிர உதவும் அம்சத்தை Uber ஆப்ஸ் அளிக்கிறது.
# உபெர் பயணத்தை உறுதிசெய்தபின் details page-குச் சென்று “உங்கள் பயணத்தைப் பகிர்” ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
# ஒருவர் தங்களது பயணநிலையை அனுப்ப விரும்பும் தொடர்புகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பு பொத்தானை அழுத்தவேண்டும்.
# பயண விபரங்கள் தேர்தெடுக்கப்பட்ட நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிரப்படும். அத்துடன் அவர்களால் உங்களது வழியைப் பின்பற்ற முடியும். ரைடர் வந்தவுடன் அதனை அறிந்துகொள்ள முடியும்.