Categories
தேசிய செய்திகள்

“கோவேக்சின் தடுப்பூசி”….. அரசியல் அழுத்தம், முறைகேடுகளால் விரைவில் பயன்பாட்டுக்கு வந்ததா……? மத்திய அரசு விளக்கம்…..!!!!!

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்த நிலையில், அதை தடுப்பதற்காக முதன் முதலில் பொதுமக்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி கோவேக்சின். இந்த தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது. இந்த தடுப்பூசி முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவேக்சின் தடுப்பூசியானது அரசியல் அழுத்தத்தின் காரணமாக தான் பொது மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.

அதாவது அரசியல் அழுத்தத்தின் காரணமாக தடுப்பூசியின் பரிசோதனைகள் தீவிர படுத்தப் பட்டதாகவும், 3 கட்ட பரிசோதனைகளில் பல்வேறு விதமான முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியானது. இந்த செய்தியை கேட்டு இந்திய  மருத்துவம் மற்றும் விஞ்ஞான துறை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகிய நிலையில ல், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் கோவேக்சின் தடுப்பூசி குறித்து பரவிய தகவல்கள் அனைத்தும் முற்றிலும் வதந்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி மத்திய நிபுணர் குழுவின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் பயன்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனம் விஞ்ஞான பூர்வ தகவல்களை வழங்கியுள்ளது.

இது தொடர்பான சோதனைகள் மற்றும் விசாரணை அனைத்தும் முழுமையாக முடிவடைந்த பிறகு தான் தடுப்பூசியானது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. உலக அளவில் அதிக அளவில் ஆய்வு செய்யப்பட்ட தடுப்பூசிகளில் கோவேக்சினும் ஒன்று என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையின் மூலம் கோவேக்சின் தடுப்பூசி குறித்து பரவிய தகவல்கள் அனைத்தும் முற்றிலும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |