Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவின் மெகா கூட்டணியா ? NDA-வை முடிவு பண்ணுனது யாரு ? எடப்பாடிகிட்ட கேட்க சொன்ன அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாங்க தெளிவா சொல்லிட்டு இருக்கோம்.  கோயம்புத்தூர் தற்கொலைப்படை தாக்குதலில் இருந்து பல விஷயங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆளுநரை சந்திக்கிறார் என்றால், நீங்க அவங்க கிட்ட கருத்து கேட்கணும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் வைக்கக்கூடிய வாதங்கள், கருத்துக்களை பொதுவெளியில் பத்திரிக்கை நண்பர்களிடம் வைக்கிறோம்.

ஆளுநரிடம் எப்ப போக முடியுமோ, அப்போது போய் ஆளுநரிடமே  நம்ம கருத்த சொல்றோம். அதனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏன் போறாங்க ? எதுக்கு போறாங்க ? என எனக்கு தெரியாது. தமிழகத்தில் கூட்டணியில் இரண்டு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு NDA என்றால் என்ன ? தேசிய ஜனநாயக கூட்டணியை முடிவு பண்ணது யாரு ? பிஜேபியின் உடைய பார்லிமென்ட்டரி போர்ட். அந்த போர்ட் உருவாக்கிய  கூட்டணியில் யார் இருக்காங்க ?

எந்த மாதிரி தலைவர்கள் இருக்காங்க ? பாராளுமன்ற போர்டுல டிசைட் பண்ணி,  ஒரு கட்சியா ? அறிவிச்சு,  கூட்டணியாக தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த அடிப்படையில தான் நான் திரும்பத் திரும்ப சொல்றேன் ஒரு மாநில தலைவராக…  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு நம்முடைய கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒன்னா இருக்கின்றோம். இதுல வந்து எந்த பிரச்சனையும் கிடையாது. பிரதமர் வரும்போது அந்த கட்சியில் இருந்து வந்து பார்க்கிறாங்க. டெல்லி வாறாங்க. முன்னாள் ஜனாதிபதி பிரிவு உபசார நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.  இதெல்லாம் நீங்க பார்த்து இருப்பீங்க என தெரிவித்தார்.

Categories

Tech |