Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்க புது ஆளுநராக நியமனமான சி.வி. ஆனந்த போஸ்…. வெளியான அறிவிப்பு….!!!!!

மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராக சி.வி. ஆனந்த போஸை(71) குடியரசுத் தலைவா் நியமனம் செய்திருக்கிறார்.

மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கா் குடியரசு துணைத்தலைவராக சென்ற ஜூலை மாதத்தில் பதவியேற்றதை அடுத்து, மணிப்பூா் மாநில ஆளுநா் இல.கணேசன் மேற்கு வங்க ஆளுநா் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தாா். இந்த நிலையில் குடியரசுத் தலைவா் மாளிகை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “சி.வி.ஆனந்த போஸை மேற்கு வங்க ஆளுநராக குடியரசுத் தலைவா் நியமனம் செய்து உள்ளாா்” என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

1977 கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான சி.வி.ஆனந்த போஸ், 2011ல் தேசிய அருங்காட்சியகத்தின் நிா்வாக தலைவராக இருந்தாா். கேரள அரசிலும், மத்திய அரசிலும் பல துறைகளில் சி.வி. ஆனந்த் போஸ் பணிபுரிந்துள்ளார். அத்துடன் கொல்லத்தின் மாவட்ட ஆட்சியராகவும், கேரள முதலமைச்சரின் செயலராகவும், மத்திய வேளாண் அமைச்சகத்தின் கூடுதல் செயலராகவும் அவா் பதவி வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |