அகமதாபாத்திலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த நவஜீவன் விரைவு ரயில் ஆந்திரம் அருகில் திடீரென்று தீ விபத்துக்குள்ளானது.
அகமதாபாத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நவஜீவன் விரைவு ரயிலானது நேற்று இரவு ஆந்திரம் மாநிலம் கூடூர் அருகில் வந்துகொண்டிருந்தது. அப்போது ரயிலில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணிகளிடையே பதற்றம் நிலவியது.
உடனே ரயில்வே அதிகாரிகள் கூடூர் சந்திப்பில் ரயிலை நிறுத்தி, தீயை அணைத்து பெரும் விபத்தைத் தடுத்தனர். இதற்கிடையில் நவஜீவன் விரைவு ரயில் கூடூர் ரயில் நிலையத்தில் சுமார் 1 மணி நேரம் நிறுத்தப்பட்டது. அவ்வாறு ரயில் விபத்து அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.