சென்னை பல்கலைக்கழகம் இன்று மதியம் நடைபெற இருந்த தமிழ் தேர்வையும் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஏற்கனவே இன்று காலையில் நடைபெற இருந்த தேர்வு வினாத்தாள் குளறுபடியால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலே இன்று மதியம் நான்காவது செமஸ்டர் தமிழ் பாடத்திற்கான அரியர் தேர்வுகள் நடைபெற இருந்தது.அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு வேறு தேதியில் நடத்தப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியீட்டுகிறது.
இரண்டு தேர்வுக்குமான வினாத்தாள் என்பது மாறி இருக்கிறது. மதியம் வரவேண்டிய வினாத்தாள் காலையிலும், காலையில் வர வேண்டிய வினாத்தாள் மதியத்திற்குமாக மாற்றி அச்சடிக்கப்பட்டு இருக்கின்றது. எனவே இன்று காலை மற்றும் இன்று மதியம் நடைபெற இருந்த இரண்டு தேர்வுகளுமே ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.