உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலமாக படங்களை வாங்கி விநியோகம் செய்வதை நிறுத்தப் போவதில்லை.
திமுகவின் இளைஞரணி செயலாளராகவும் செம்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏ ஆகவும் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி, சைக்கோ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலமாக பல திரைப்படங்களை வாங்கி விநியோகமும் செய்து வந்துள்ளார். ஆனால் மற்ற நடிகர்களின் படங்களை வாங்கி விநியோகம் செய்வது இனி நிறுத்தி விடலாம் என்று சில மாதங்களுக்கு முன்பே முடிவெடுத்துள்ளாராம்.
இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது, ” நான் நல்ல படங்களான தங்களது படங்களை வாங்கி வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ள தயாரிப்பாளர்களின் படங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறேன். ஆனால் உதயநிதி மிரட்டி சில படங்களை வாங்கி வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்ட எனது தந்தை என்னை அழைத்து இது தேவை இல்லாத விஷயம் என்று என்னிடத்தில் கூறியுள்ளார். கெட்ட பெயர் வேண்டாம் என்றும் விநியோகம் செய்வதை விட்டுவிடலாம் என்றும் முடிவெடுத்தேன்.
அப்போது இதனை கேள்விப்பட்ட கமல் சார் எனது தந்தையிடம் உதயநிதியை தொடர்ந்து படங்களை விநியோகம் செய்ய சொல்லுங்கள் அவர் சினிமாவிற்கு வந்த பிறகுதான் திரையுலகம் நன்றாகவுள்ளது. இவர் வெளிப்படை தன்மையோடும் உண்மையான கணக்குகளையும் சரியான முறையில் கொடுக்கிறார். இது படங்களுக்கும் தமிழ் சினிமாவுக்கும் ரொம்ப நல்ல விஷயம் என்று எனது தந்தையிடம் கூறியிருக்கின்றார். அதன் பிறகு நிறைய படங்கள் இல்லாமல் குறைவான படங்களை வாங்கி விநியோகம் செய்யுமாறு எனது தந்தை கூறியுள்ளார். அதன் காரணமாகவே தொடர்ந்து குவாலிட்டியான நல்ல படங்களை வெளியிட்டு வருகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.