ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அதிமுக,திமுக மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி சென்ற கார் கண்ணாடியை அடித்து நொறுக்கி, திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளாட்சி மறைமுக தேர்தல் டி.என்.பாளையம் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு நடத்தப்பட்டது. அதில் அதிமுக சார்பில் விஜயலக்ஷ்மி போட்டியிட்டார். இதில் அவர் 6 வாக்குகள் அதிகமாக பெற்று ஒன்றிய குழு தலைவராக விஜயலக்ஷ்மி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் மறைமுக தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை, பொறுத்து கொள்ள முடியாத திமுகவினர், திமுக ஒன்றிய செயலாளரான சிவபாலன் தலைமையில் கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம் பகுதியில், அதிமுக அமைச்சரை பற்றி தகாத வார்த்தைகளில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்கள்.
இதன் தொடர்பாக கேள்வி எழுப்பிய அதிமுக முன்னாள் MLA கந்தசாமியின் கார் கண்ணாடியை திமுகவினர் அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதலில் காயமடைந்த கந்தசாமி பங்களாபுதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.