ஆர்டர்லி முறை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உயர் அதிகாரிகளின் வீட்டில் சமைப்பதற்கும், துவைப்பதற்கும், அதிகாரிகளின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்படும் ஆர்டர்லி முறையை ஒழிக்க ஏற்கனவே பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவை அரசு முறையாக அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
ஆர்டர்லி முறையை பின்பற்றுவதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. ஆர்டர்ல்லியாக பணியாற்ற மறுத்த காவலரை பணிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.