நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் சற்று முன் அறிவித்துள்ளது. நாளை குரூப் 1 முதல் நிலை தேர்வு நடைபெற உள்ளதால் செமஸ்டர் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்படுவதாகவும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே குரூப் 1 தேர்வு காரணமாக பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னை பல்கலைக்கழகத்திலும் செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories