Categories
மாநில செய்திகள்

குரூப் 1 தேர்வர்களின் கவனத்திற்கு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!

குரூப் 1 தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

குரூப் 1 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு முதல் நிலை முதன்மை நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றார்கள். அந்த வகையில் முதல் நிலை தேர்விற்கு 3 லட்சத்து  16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பிருந்த நிலையில் கடந்த மாதம் 30ஆம் தேதி  தேர்வு நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் ஒரு சில காரணங்களுக்காக தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் முதல் நிலை தேர்வுகள் நாளை (சனிக்கிழமை) காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை tnpsc வெளியிட்டுள்ளது. இதனால்  தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |