பல துறைகளில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முன்னோடியாக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது பற்றி தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், தொழிற்சங்க இயக்கம் என்பது இங்கு தான் முதன்முதலாக உருவானது. பிரிட்டிஷார் அதிகப்படியான தொழிற்சாலைகளை இங்கு உருவாக்கினார்கள். அரசியல் உரிமையை மட்டுமல்ல, தொழிலாளர் உரிமையையும் தமிழ்நாடு கேட்டுப் போராடியது என்றார்.
மேலும் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தொழிலாளர் ஓய்வு இல்ல பராமரிப்புக்காக ரூபாய்.7.5 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. தமிழகத்தில் 15 மாதங்களில் புது தொழில்கள் துவங்கப்பட்டுள்ளது. தொழில்நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. பல மாநிலங்கள், பல்வேறு நாடுகளிலிருந்து வந்து தமிழகத்தில் தொழில் தொடங்குகிறார்கள் என்று குறிப்பிட்டார்.