நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் வருடம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த பணம் 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என்ற விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள் அனைவரும் பிஎம் கிசான் கார்டு புதுப்பிக்க வேண்டியது அவசியம். இந்த கார்டை வங்கிகளுக்கு சென்று அலைந்து திரிந்து புதுப்பிக்க வேண்டியது இருக்கும்.
தற்போது இதனை எளிதாக்கும் விதமாக இந்தியன் வங்கி புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த வங்கியில் வேவ் திட்டத்தின் கீழ் பலவித டிஜிட்டல் மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கிசான் கிரெடிட் கார்டு டிஜிட்டல் முறையில் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்வதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக வீட்டில் இருந்தவரை விவசாயிகள் ஆன்லைன் மூலம் கிசான் கணக்குகளை புதுப்பித்துக் கொள்ள முடியும். அதே சமயம் இன்டர்நெட் வசதி இல்லா மொபைல் போன் பயன்படுத்துவோர் மற்றும் குறைந்த இணையதள வேகத்தை உடைய பயனாளிகளும் குறுந்தகவல் மூலமாக இந்த வசதியை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.