Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் தினத்தையொட்டி புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடும் மிதாலி ராஜ்…வைரலாகும் வீடியோ..!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரல் ஆகி, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வருகிற மார்ச்8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று உலக மகளிர் தினம் கொண்டப்படும். இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து மகளிர் உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றிபெறுவோம் என்றும், “நாமும் சாதிக்க முடியும் என்பதை இந்த உலகிற்கு உணர்த்த வேண்டும்” என்ற வாசகம் அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. மகளிர் தினத்தையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |