Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளிடம் புலம்பிய தந்தை…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மகன் இறந்த துக்கத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள கருணாகரச்சேரி ராமாபுரம் நியூ தெருவில் விவசாய கூலி தொழிலாளியான தனசேகர்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூங்கொடி(44) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிஷ்(17) என்ற மகனும், மவுனிகா(24) என்ற மகளும் இருந்துள்ளனர். மவுனிகாவுக்கு திருமணமாகி கணவன் மற்றும் இரண்டு வயதுடைய மகன் இருக்கிறான். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நல குறைவு காரணமாக ஹரிஷ் இறந்துவிட்டார். மகன் இறந்த நாள் முதல் தனசேகரும், பூங்கொடியும் மன உளைச்சலில் இருந்துள்ளனர்.

நேற்று முன்தினம் மவுனிகா தனது தந்தையிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது ஹரிசுக்கு அடுத்த மாதம் முதலாம் ஆண்டு நினைவு நாள் வரப்போகிறது என தனசேகர் தனது மகளிடம் புலம்பியுள்ளார். அப்போது மவுனிகா அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதனையடுத்து நேற்று குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தனசேகரும், பூங்கொடியும் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தம்பதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |