Categories
சினிமா தமிழ் சினிமா

“இது பிக் பாஸ் வீடா இல்லனா, அந்த மாதிரியான இடமா”…. பிபி போட்டியாளர்களை கடுமையாக விளாசிய வனிதா….!!!!!

பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களை கடுமையாக விளாசி இருக்கிறார். அவர் கூறியதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே மாமா வேலை தான் பார்க்கிறார்கள். அந்த அளவுக்கு ஒரு வரைமுறையே இல்லாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. மணிகண்டனிடம் அமுதவாணன் நீங்கள் குயின்சியை காதலிக்கிறீர்களா என்று கேட்கிறார்.

மணிகண்டனுக்கு திருமணம் ஆகி வெளியில் மனைவி மற்றும் குழந்தை இருக்கிறது என்ற எண்ணம் கூட இல்லாமல் அப்படி கேட்கிறார். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயலை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அதன் பிறகு ராபர்ட் மாஸ்டர் போட்டியில் வாய்ப்புக்காக தேடி செல்லவில்லை என்றும், பொண்ணுக்காக தான் வந்தேன் என்றும் கொஞ்சம் கூட கூசாமல் கூறுகிறார். அவருக்கு வெளியில் மனைவி குழந்தை இருக்கிறது என்ற எண்ணம் கூட இல்லாமல் காதலித்துக் கொண்டிருக்கிறான்.

கதிர், குயின்சியுடன் சேர்ந்து அடுத்ததாக யார் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்று ஆலோசிக்கிறார். ராபர்ட் மாஸ்டர் பொண்ணுக்காக போனேன், உறவுக்காக போனேன் எனக்கு குயின்சி கிடைத்துவிட்டாள் என்று கூறுகிறார். இப்படி பெண்கள் பின்னால் சுற்றிக்கொண்டு இருந்தால் அவரை எந்த பெண் தான் மதிக்கும். அது மட்டுமா முத்தம் கொடு என் அருகில் வா என்றெல்லாம் மாஸ்டர் கேட்கிறார். இந்த ஷோவில் கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமே இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை வனிதாவின் பேட்டி தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |