ஐபிஎல்லில் ஆர்.சி.பி அணி விரைவில் 4 கோப்பைகளை வெல்லும் என்று அந்த அணிக்காக முன்பு ஆடிய ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்..
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் இதுவரை 15 சீசன்களை எட்டியுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக 2023 ஆம் ஆண்டுக்கான 16 வது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் வரும் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி 2008 ஆம் ஆண்டு தொடக்கப் பருவத்தில் இருந்து விளையாடி வருகிறது. பல ஆண்டுகளாக அந்த அணியால் ஒரு பட்டத்தை கூட வெல்ல முடியவில்லை. கடந்த 15 ஆண்டுகளில் அதிரடி வீரர்களான கிறிஸ் கெய்ல், சேன் வாட்சன், ஏபி டிவில்லியர்ஸ், கே.எல் ராகுல் உள்ளிட்ட பல வீரர்கள் ஆர்சிபி அணிக்கு விளையாடிய போதிலும், அந்த அணியால் ஒரு முறை கூட கோப்பையை கூட கைப்பற்ற முடியவில்லை அவ்வளவு ஏன் கிங் விராட் கோலி அணிக்கு தலைமை தாங்கிய போதிலும் சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை.
3 முறை (2009, 2011, 2016) இறுதிப் போட்டிக்கு சென்றும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல் பெங்களூர் அணிக்கு துரதிஷ்டம் துரத்துகிறதோ என்னவோ தெரியவில்லை, சாம்பியன் பட்டம் எட்டா கனியாகவே இருக்கிறது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் மற்றும் ஆர்சிபியின் முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸ், இந்த ஆர்சிபி தங்களது முதல் ஐபிஎல் பட்டத்தை வெல்வதற்கு வெகு தொலைவில் இல்லை என்றும், ஒருமுறை வெற்றி பெற்றால் தொடர்ந்து பட்டங்களை வெல்வார்கள் என்றும் நம்புகிறார்.
இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட வீடியோவில் டி வில்லியர்ஸ் பேசியதாவது, “இப்போது எத்தனை சீசன்கள் ஆகிவிட்டன? சில, 14 அல்லது 15 அல்லது எதுவாக இருந்தாலும், அவர்கள் (ஆர்சிபி) கோப்பையை வெல்லவில்லை என்ற நிலையை உடைக்க விரும்புகிறார்கள். RCB ஒரு முறை வென்றால், அவர்கள் 2 , 3 , 4 என சீக்கிரம் அடுத்தடுத்து கோப்பையை பெறுவார்கள் என்று நினைக்கிறேன். என்ன நடக்கிறது என்று காத்திருங்கள், டி20 கிரிக்கெட் சில சமயங்களில் எதுவும் நடக்கலாம், குறிப்பாக நாக் அவுட் போட்டிகளில் கணிக்க முடியாது. ஆனால் ஆர்சிபி யின் திருப்பம் விரைவில் வர உள்ளது என்று கூறினார்.
டி வில்லியர்ஸ் ஏப்ரல் 9, 2011 அன்று கொச்சி டஸ்கர்ஸ் கேரளாவுக்கு எதிராக RCB க்காக அறிமுகமானதில் இருந்து 11 சீசன்களில் அணிக்காக ஆடியுள்ளார். ஆர்.சி.பி அணியை கடந்த ஆண்டு முதல் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் வழி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
It is no secret who @ABdeVilliers17 will be cheering for this year!#RCB fans, are you ready to chant Ee Sala Cup Namde with him?🤩 pic.twitter.com/sf5fCYJmju
— Star Sports (@StarSportsIndia) November 17, 2022