மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் தடாக், ரோகி, குட்லக் ஜெர்ரி ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இப்போது அவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிலி என்ற படம் திரைக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் ஜான்வி கபூர், அவரது தாய் ஸ்ரீதேவியின் சென்னையில் உள்ள வீட்டை சுற்றி காட்டியிருக்கிறார்.
இந்த வீடு ஸ்ரீதேவியின் முதல் வீடு என்றும், வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையையும் காட்டி, ஜான்வி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது ‘எனது குளியலறைக்கு பூட்டு கிடையாது. நான் குளியலறைக்கு சென்று பசங்களுடன் பேசுவேன் என்று பயந்து, அம்மா பூட்டு போட மறுத்துவிட்டார்’ என்று கூறினார்.