நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தை 40% வரை குறைக்க அரசு முடிவு எடுத்துள்ளதாக வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான தகவலை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணத்தை குறைப்பதற்காக திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் மத்திய அமைச்சரான நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி எம்.பி வில்சனுக்கு பதில் அளித்துள்ளார்.
இது குறித்து திமுக எம்பி தன்னுடைய twitter பதிவில், நாடு முழுவதுமாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக வாகனப்பதிவின் போதே ஒரு முறை சிறிய கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். அதற்கு தற்போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.