Categories
மாநில செய்திகள்

இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் வெளியீடு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு பொது கவுன்சிலிங் கடந்த வாரம் நடந்து முடிந்த நிலையில் அதில் தகுதி பெற்றவர்களுக்கான கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில் ஏதாவது ஆட்சியபனை இருந்தால் அதில் உள்ள குறைகளை தீர்க்க இன்று மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாளை துணை கவுன்சிலிங் தொடங்க உள்ள நிலையில் வருகின்ற 21ஆம் தேதி ஆன்லைன் விருப்ப பதிவு முடிவடைகின்றது. அன்று தற்காலிக இட ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்படும். பின்னர் 22 ஆம் தேதி இரவு 7 மணிக்குள் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களை மாணவர்கள் https://suppl.tneaonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |