Categories
தேசிய செய்திகள்

விக்ரம் எஸ் ராக்கெட் வெற்றி… அடுத்து ஏவுதளம் எப்போது?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தனியார் நிறுவனம் சார்பில் விக்ரம் எஸ் ராக்கெட் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு விட்டது. அடுத்தகட்டமாக மற்றொரு தனியார் நிறுவனமான ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் புதிய ஏவுதளத்தை கட்டமைத்து வருகிறது. அதற்கான பணிகள் இறுதிநிலை அடைந்துள்ளதாகவும் அடுத்த மாதத்தில் அங்கிருந்து முதல் ராக்கெட் திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியுடன் ஒருங்கிணைந்து செயல்பட அக்னிகுல் காஸ்மோஸ் எனும் நிறுவனம் இதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் கூறியது, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்களை ஏவக்கூடிய மிகப்பெரிய ஏவுதளமோ அல்லது இஸ்ரோவால் அமைக்கப்பட்ட ஏவுதாளமோ எங்களது தேவைக்கு ஏற்புடையதாக இல்லாததால் நாங்களே பிரத்யோகமாக ஒரு ஏவுதலத்தை வடிவமைக்க திட்டமிட்டோம். இதனையடுத்து சதீஷ் தவண் வளாகத்தில் கடந்த ஆறு மாதங்களாக அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது‌ தற்போது அது இறுதி நிலை எட்டியுள்ளது. அக்னிபான் எனப்படும் எங்களது ராக்கெட், காப்பரிமை பெற்ற கிரையோஜெனிக் என்ஜினை கொண்டு வடிவமைக்கப்பட்டது. அதனை ஏவுவதற்கு பிரத்யோகமாக இருக்கக்கூடிய ஏவுதளம் தேவை. அதனை பூர்த்தி செய்யவே அந்த ஏவு தளத்தை கட்டமைத்துள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |