Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழகத்தை நோக்கி வரும் புதிய ஆபத்து…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது வங்கு கடலில்உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றால் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக மற்றும் புதுவை, ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதனால் நாளை தமிழக கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர பகுதிகளில் அனேக இடங்களில், உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |