Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு – தூக்கு தண்டனைக்கு எதிராக குற்றவாளி முகேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய சீராய்வு மனு!

நிர்பயா வழக்கில் சட்ட, அரசியல் சாசன வாய்ப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்ட நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளான்.

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ஏற்கனவே ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை பிறப்பித்தது.

ஆனால் இருமுறையும் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ததால் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. புதிய தேதியின்படி குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் 3வது டெத் வாரண்ட் பிறப்பித்தது. இதற்கிடையே குற்றவாளி பவன் குமார் குப்தா இருவரும் குடியரசு தலைவரிடம் கருணை மனு அளித்துள்ளதால் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும், டெத் வாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இரண்டு நாளுக்கு முன்னர் நடந்த நிலையில் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு பரிசீலனையில் இருப்பதால் தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது. ஆதலால் மறு உத்தரவு வரும் வரை தூக்கு தணடனையை நிறுத்தி வைக்கிறேன் என நீதிபதி உத்தரவிட்டார். இதனால் 3வது முறையாக தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

கடைசி வாய்ப்பாக பவன் குப்தா குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுவை அனுப்பியிருந்த நிலையில் அதுவும் நிராகரிக்கப்பட்டது. இதன் மூலம் குற்றவாளிகளின் தூக்கு தண்டனை உறுதியான நிலையில் நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை வரும் 20ம் தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மார்ச் 20ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தண்டனையை நிறைவேற்ற அறிவுறுத்தபட்டுள்ளது.

இந்த நிலையில் தூக்கு தண்டனைக்கு எதிராக புதிய சீராய்வு மனு மற்றும் கருணை மனு அளிக்க அனுமதிக்க மனுவில் கோரிக்கை விடுத்துள்ளான்.

Categories

Tech |