Categories
மாநில செய்திகள்

“எல்லாமே முறைப்படி தான் நடந்தது”…. ஓபிஎஸ் கிட்ட முன்னாடியே சொல்லியாச்சு…. சுப்ரீம் கோர்ட்டில் இபிஎஸ் பதில் மனு….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக செயல்பட்டு தலைமையை கைப்பற்றுவதற்காக கடுமையாக மோதி கொள்கிறார்கள். கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதிவுகளிலிருந்தும் நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இது தொடர்பாக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் இறுதி தீர்ப்பை பொறுத்து தான் அதிமுக கட்சியின் தலைமை பொறுப்பு யாரிடம் செல்லும் என்பது தெரிய வரும்.

இந்நிலையில் அதிமுக கட்சியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் தொடர்பாக இபிஎஸ் தரப்பில் இருந்து பதில் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஓபிஎஸ் கட்சியின் விதிமுறைகளை மீறி அலுவலகத்தை சூறையாடியுள்ளார். அதன் பிறகு பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு முன்பாக ஓபிஎஸ்-க்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டுதான் பொதுக்குழு கூட்டமானது நடத்தப் பட்டுள்ளது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |