இந்திய ரயில்வே அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி மூலம் ரயில் பயணிகள் தாங்கள் விருப்பப்பட்ட உணவுகளை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு முன்பு ரயில்வே வாரியதால் அங்கீகரிக்கப்பட்ட சப்பாத்தி, இட்லி, பிரியாணி மற்றும் சில குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் மட்டுமே ரயில்களில் விநியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது வெளிவந்த புதிய அறிவிப்பின்படி இரயில் பயணிகள் தாங்கள் விரும்பும் உள்ளூர் மற்றும் வெளியூர் உணவுகள், நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுகள், குழந்தை களுக்கான உணவுகள் போன்றவற்றை ஐஆர்சிடிசி செயலி மூலம் ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும் பருவ காலங்களுக்கு ஏற்றார் போன்று ஆரோக்கியமான உணவுகளை ஆர்டர் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.