தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் சிங்கப்பூரில் இருந்து அண்டார்டிகாவில் இருக்கும் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக 30,000 கிலோமீட்டர் தொலைவு கடந்து 4 கண்டங்கள் தாண்டி சென்றிருக்கிறார்.
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மானசா கோபால் என்ற பெண் சிங்கப்பூரில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் இருக்கிறார். இவர் அண்டார்டிகாவில் இருக்கும் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக 30,000 கிலோ மீட்டர் தொலைவு கடந்து சென்றதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இம்மாதம் ஐந்தாம் தேதி அன்று அவர் பதிவிட்ட அந்த வீடியோ அதிகம் பேரை ஈர்த்துள்ளது. அண்டார்டிகா செல்வதற்காக மானசா முதலில் ஜெர்மன் நாட்டின் ஹாம்பர்க் நகரத்திற்கு சென்றிருக்கிறார். அங்கிருந்து, அர்ஜென்டினாவில் இருக்கும் யூஷாஷியா என்ற நகருக்கு சென்றிருக்கிறார்.
அங்கிருந்து, அண்டார்டிகாவிற்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். உணவை குறிப்பிட்ட இடத்தில் கொண்டு சேர்ப்பதற்காக கண்டம் தாண்டி கண்டம் சென்றதோடு சேறு, பனிகளையெல்லாம் கடந்து சென்றது, அவர் வெளியிட்ட வீடியோவில் இருக்கிறது.