கிறிஸ்துமஸுக்கு விஷால் நயன்தாரா திரைப்படங்கள் மோதுகிறது.
தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் தற்போது ஜவான், கனெக்ட், இறைவன், கோல்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் தற்போது நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றது.
இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகிய நிலையில் திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதுபோலவே விஷால் நடித்திருக்கும் லத்தி படமும் டிசம்பர் 22ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருக்கின்றார்கள். இதனால் லத்தி திரைப்படமும் நயன்தாரா திரைப்படமும் நேருக்கு நேர் மோதிக் கொள்வது உறுதியாகி இருக்கின்றது.