ரேடிசன் புளு என்பது இந்தியாவின் சென்னையில் உள்ள ஓர் ஐந்து நட்சத்திர உணவகம் ஆகும். சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள, மீனம்பாக்கத்தின் ஜிஎஸ்டி சாலையில் இவ்வுணவகம் அமைந்துள்ளது. இந்நிலையில் ராடிசன் புளூ ஓட்டலின் உரிமையாளரும், தொழிலதிபருமான அமித் ஜெயின் காசியாபாத்தில் உள்ள கிராம சொசைட்டி இல்லத்தில் சடலமாக கிடந்தார்.
இதனை கண்ட அவரது ஓட்டுநர் டெல்லி மாண்ட்வலி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அமித் ஜெயனின் உடலை மீட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை சந்தேகத்திற்கு இடமான எந்த தடயமும் சிக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.