சிறார் பருவக் காதல் விவகாரங்கள் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுபவையே அன்றி குற்றச்செயல் இல்லை என நீதிபதி பி.என்.பிரகாஷ் கூறியுள்ளார்.
குற்றச்செயல்களில் ஈடுபடும் இளம் சிறார்களை நல்வழிப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட பறவை திட்டம் குறித்து துணை மற்றும் உதவி ஆணையர்களுக்கான பயிற்சியை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் தொடங்கி வைத்தார். பின் பேசிய அவர், காதல் திருமண விவகாரங்களில் சிறார்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்படுவது அவர்களது வாழ்க்கையை சீர்குலைத்து எதிர்காலத்தை பாழாக்குகிறது.
சிறார் பருவக் காதல் விவகாரங்கள் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுபவையே அன்றி குற்றச்செயல் இல்லை . ஸ்டைலாக முடித்திருத்திக் கொள்ளும் மாணவர்களை பிடிக்கிறீர்கள், ஏன் நீங்கள் எல்லாம் MGR போன்று ஹேர்ஸ்டைல் வைத்து கொண்டதில்லையா? அந்த காலத்து நடிகர்கள் போல பெல் பாட்டம் பேண்ட் அணிந்ததில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.