மனுஷி திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆண்ட்ரியா முடித்துள்ளார்.
பாடகி, நடிகை என தமிழ் சினிமாவில் 17 வருடங்களுக்கு மேலாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் ஆண்ட்ரியா. இவர் ஹீரோயினாக நடித்திருக்கும் அனல் மேல் பனித்துளி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் கோபி நாயனார் இயக்கி வரும் மனுஷி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஆண்ட்ரியா. இத்திரைபடத்தின் படபிடிப்பு நிறைவு பெற்று இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவு பெற்றிருப்பதால் அடுத்த வருடம் ரிலீசாக தயாராகி வருகின்றது.