பிக்பாஸ் 6வது சீசன் வீட்டில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதாவின் கவனம் ஈர்ப்பதற்காக பல விஷயங்களை செய்துவருகிறார். குறிப்பாக ரச்சிதாவின் மீது கிரஷ் இருக்கிறது என கூறி அவரிடம் தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கிடையில் அதற்கு முற்றுப் புள்ளி வைக்க ரச்சிதா தொடர்ந்து முயற்சி செய்தாலும் அவர் கேட்பதாக இல்லை.
இந்த நிலையில் சென்ற வாரம் ராஜா குடும்பம் டாஸ்கில் ரச்சிதா ராணியாகவும், ராபர்ட் ராஜாவாகவும் கெட்டப் போட்டு இருந்தனர். இந்த டாஸ்கில் ரச்சிதா அஸீம் உடன் இணைத்து திருடவேண்டும் என ஒரு சீக்ரெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதனை அவர்களும் செய்து முடித்தனர். அதன்பின் அவர்கள் திட்டம்போட்டு திருடும் வீடியோவை பிக்பாஸ் அனைவருக்கும் டிவியில் போட்டு காட்டினார்.
அதனை பார்த்து ஷாக்கான ராபர்ட் மாஸ்டர் கதறி கதறி அழுதார். ரச்சிதா தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி அவர் அழுத நிலையில், மற்றவர்கள் அவரை சமாதானப்படுத்தினர். அப்போது அவரிடம் ரச்சிதா சென்று பேசினார். அதனை தொடர்ந்து ரச்சிதாவும் பாத்ரூமில் கதறி கதறி அழுதார். நம்பிக்கை துரோகம், முதுகில் குத்தி விட்டேன் என ராபர்ட் கூறும் வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளவே முடியாதது என சொல்லி ரச்சிதா கதறி அழுதிருக்கிறார்.