Categories
தேசிய செய்திகள்

நீங்க புது சிம் கார்டு வாங்க போறீங்களா?…. அப்போ இதை மறந்திடாதீங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!

டிஜிட்டல் பரிவர்த்தனை, ஏதேனும் செயலிகள் (அ) லிங்குகள் வாயிலாக மோசடி நடப்பது பற்றி நமக்கு தெரிந்தது ஒன்று. இப்போது சிம்கார்டு மாற்றி மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. மொபைல் பயன்படுத்துபவர்களை குறி வைத்து செய்யப்படும் இம்மோசடியை தடுக்கும் வகையில் SMS குறித்த புதிய விதியை டெலிகாம் துறை உருவாக்கி இருக்கிறது. இவ்விதியினை நம் நாட்டின் பிரபல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆன ஜியோ, ஏர்டெல், வோடோபோன் மற்றும் BSNL ஆகியவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஒவ்வொரு நிறுவனமும் அதன் புது சிம்கார்டை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் போதெல்லாம், முதல் 24 மணிநேரத்திற்கு SMS-ன் இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங்க் சேவைகள் நிறுத்தும். இதன் வாயிலாக சிம் பரிமாற்ற மோசடி தடுக்கப்படும் என கருதப்படுகிறது. புது சிம் பெற்றபவர்களுக்கு SMS அனுப்பி அதன் வாயிலாக அந்நபர்களின் தனிப்பட்ட விபரங்களானது சேகரிக்கப்படுகிறது. அந்த வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவலைப் பெற்றபின், மோசடி செய்பவர்கள் டெலிகாம் ஆபரேட்டரைத் தொடர்பு கொண்டு அந்த வாடிக்கையாளர் பயன்படுத்தும் அதே புது சிம்மைக் கேட்கின்றனர்.

புது சிம்கார்டு மோசடி கும்பலுக்கு கிடைத்ததும் பயனாளரின் போனில் இயங்கக்கூடிய சிம்கார்டின் சேவையானது நின்றுவிடும். அதன்பின் மோசடி செய்பவர்களிடம் உள்ள புது சிம்மில் அனைத்து விபரங்களும் வர தொடங்கி விடும். வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்கள் பிஷிங் இணைப்பு வாயிலாக மோசடிக்காரர்களுக்கு கிடைத்து விடுகிறது. அவர்கள் இந்த இணைப்பை உங்களுக்கு SMS வாயிலாகவோ (அ) மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். அந்த இணைப்பை நீங்கள் க்ளிக் செய்தபின் உங்களது தனிப்பட்ட தகவல்கள் மோசடி கும்பலுக்கு கிடைத்துவிட அவர்கள் உங்கள் பழைய சிம்மை வைத்து புது சிம்மை பெற்று மோசடி செயலில் ஈடுபடுகின்றனர்.

அந்த புது சிம்மை அவர்கள் பெற்றவுடன் நம் தனிப்பட்ட தகவலுக்கு தேவையுள்ள ஓடிபி-யும் அவர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. இந்த ஓடிபிக்களை வைத்து அவர்கள் பல்வேறு நிதி சம்மந்தமான மோசடிகளையும் செய்ய நேரிடும் அபாயம் இருக்கிறது. அவ்வாறு மோசடி குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவே தொலைத் தொடர்பு துறை புதிய விதியை கொண்டு வந்திருக்கிறது. இதை செயல்படுத்த 15 நாட்கள் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. புது சிம் (அ) எண்ணை அப்க்ரேட் செய்வதற்குரிய கோரிக்கையைப் பெற்றால் இது குறித்த தகவலை உடனே தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதன் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். அத்துடன் கால் செய்து உறுதி செய்தால் மட்டுமே அவர்களுக்கு புது சிம் கார்டு வழங்கவேண்டும் என அந்த விதிகளில் கூறப்பட்டு உள்ளது.

Categories

Tech |