கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா ஆனந்தகுமார் இருக்கிறார். திமுக வசம் இருக்கும் கோவையில் மேயர் பதவிக்கு மீனா லோகு என்பவர் போட்டியிட்டுள்ளார். ஆனால் தலைமை எளிய குடும்பத்தைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமாருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. கோவை மேயர் மாநகராட்சி கூட்டங்களை நடத்துவது, வார்டு வாரியாக சென்று பிரச்சனைகளை கேட்டு மக்கள் குறைகளை தீர்த்து வைப்பது, புதிய திட்டங்களை செயல்படுத்துவது என தீவிர களப்பணி செய்து வருகிறார்.
இந்நிலையில் லோகு மீனாவுக்கு மாநகராட்சி மண்டல குழு தலைவர் பதவியை கட்சி மேலிடம் வழங்கியுள்ள நிலையில், எப்படியாவது மேயர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் சில கவுன்சிலர்களை தன்னுடைய கையில் போட்டு கொண்டு மேயருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மீனா லோகு எம்பி கனிமொழிக்கு புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த புகாரை பார்த்த கனிமொழி டென்ஷனாகி ஆதாரம் இல்லாத புகார்களை தெரிவிக்க வேண்டாம். ஒழுங்காக கொடுத்த பணியை செய்யுங்கள் என்று மீனா லோகுவுக்கு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் மீனா லோகு அடங்காமல் மேயரை பற்றிகுறை சொல்வதற்காகவே தனியாக ஒரு ஆளை நியமித்து புதிய சர்ச்சைகளை கிளப்பி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் மேயர் கல்பனா அப்செட்டாக அமைச்சர் செந்தில் பாலாஜியோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்களுடைய பணியை மட்டும் நீங்கள் செய்யுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளாராம். இந்நிலையில் மேயர் கல்பனாவுக்கு எதிராக செயல்படுபவர்கள் குறித்த லிஸ்ட்டை தற்போது திமுக மேலிடம் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் மேலிடத்தின் கையில் லிஸ்ட் கிடைத்தவுடன் மேயருக்கு எதிராக செயல்படுபவர்கள் எதிர்பார்க்காத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசப்படுகிறது.