Categories
தேசிய செய்திகள்

இரும்பு மீது விதிக்கப்பட்ட ஏற்றுமதி வரி ரத்து…. மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு….!!!!

உள்  நாட்டில் உருக்குவிலை அதிகரிப்பை அடுத்து இரும்பு ஏற்றுமதியில் பல கட்டுப்பாடுகளை சென்ற மே மாதம் மத்திய அரசு விதித்தது. இவற்றில் குறிப்பாக ஸ்டில் ஏற்றுமதி செய்வதற்கு 15% வரியானது விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வரியை மத்திய அரசு இப்போது ரத்து செய்துள்ளது. அந்த வகையில் மே மாதத்துக்கு முந்தைய நிலையை மீண்டுமாக கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரும்பு ஏற்றுமதியில் 2022ம் வருடம் மே 22ஆம் தேதிக்கு முன் இருந்த நிலையை மத்திய அரசு மீட்டெடுத்து உள்ளது.

அதுமட்டுமின்றி இரும்புத் தாது கட்டிகள் மற்றும் இரும்புத்தாது துகள்கள் ஆகிய குறிப்பிட்ட உருக்குபொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை திரும்பப் பெற்றிருக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர். இதேபோன்று ஆந்த்ராசைட் (அ) பி.சி.ஐ. நிலக்கரி உள்ளிட்ட சில நிலக்கரி வகைகளுக்குரிய இறக்குமதி வரிச்சலுகைகளும் திரும்பப்பெறப்பட்டுள்ளது.

Categories

Tech |