Categories
அரசியல் மாநில செய்திகள்

“கும்பகர்ணன் போல் தூங்கும் திமுக”….. தமிழ் மண், இனம், மக்களைக் காக்க ராணுவ போர் வீரராக எடப்பாடி….. ஆர்.பி உதயகுமார் பெருமிதம்….!!!!!

தமிழகத்தில் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 21-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த வெற்றி என ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். இதுகுறித்து ஆர்பி உதயகுமார் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மழையின் பாதிப்பின் காரணமாக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருந்தார். அதோடு நடப்பாண்டுக்கான  காப்பீடு பிரிமியத்தையும் அரசே ஏற்க வேண்டும் எனவும் எடப்பாடி வலியுறுத்தி இருந்தார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை விட்டதன் காரணமாகத்தான் 27 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பருவமழையின் காரணமாக மாநிலம் முழுவதும் விவசாய நிலங்கள் பெருமளவு சேதமடைந்துள்ளதால் ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை நிவாரண உதவி வழங்க வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். கடந்த வருடம் மழை பெய்த போது அதிகாரிகளை அனுப்பி பாதிப்புகளை கணக்கெடுத்ததில் நிறைய கணக்கெடுப்புகள் விடுபட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே இது தொடர்பான கணக்கெடுப்புகளை முறையாக நடத்த வேண்டும். பயிர் காப்பீட்டுக்கான கட்டணம் ரூபாய் 300 ஆக இருக்கும் பட்சத்தில், விவசாயிகளுக்கு 250 ரூபாய் தான் திமுக அரசு வழங்குகிறது. இதனால் விவசாயிகள் மனவேதனையில் இருப்பதோடு, 80% விவசாயிகளுக்கு கடந்த வருடம் பயிர் காப்பீட்டு நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்பதையும் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

இன்று செயல்படாத திமுக அரசு, முடங்கி கிடக்கிற அரசு மற்றும் கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கிற அரசை முதன்மைப் போர் வீரராக, ராணுவ வீரராக மற்றும் முதன்மை களப்போராளியாக இருந்து எதிர் கட்சி தலைவர் எடப்பாடி தட்டி எழுப்பி கொண்டிருக்கிறார். மேலும் தமிழ் மொழிக்காக, தமிழ் இனம் காக்க, தமிழ் மண் காக்க மற்றும் தமிழக மக்களுக்காக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |